ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தாரை நான் சந்திப்பதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். எனவே இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்து விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு பின்னர் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது உத்தரப்பிரதேச காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நான் சந்திப்பதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…