#BREAKING: எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை- இந்திய ராணுவம்..!
இந்திய ராணுவம் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டி இருந்த நிலையில் இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எல்லை தாண்டி துப்பாக்கி சூடு உள்ளிட்ட எந்தவிதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை, எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை .
சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் எனவும் நேற்று எல்லையில் சீன படையினர் அத்துமீற முற்பட்டனர் என இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா , சீனா இடையில் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில், கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் 15-ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.