நாளை செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாக்களும் மாநிலங்கள் முழுவதும் நடைபெறும்.
அதேபோல, புதுச்சேரியிலும் நாளை வழங்க உள்ள விருது பட்டியல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 4 பேருக்கு வழங்கபட உள்ளது. முதல்வரின் சிறப்பு விருது 7 ஆசிரியர்களுக்கும், கல்வி அமைச்சரின் வட்டார விருது 10 பேருக்கும் என, மொத்தம் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மேற்கண்ட விருதுகளை வழங்க உள்ளனர்.
இந்த விருது பற்றி புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், சிறந்த நல்லாசிரியர் விருது வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் கட்டப்படவில்லை என்றும் அதற்கான தேர்வு கமிட்டி குழுவினர் தகுதியானவர்களை தேர்வு செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்க்ளை நிரப்புவது பற்றி கூறுகையில், காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…