கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.நீதிமன்றம் மற்றும் லோக்பால் சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…