தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதை எப்போதும் குடும்பம் முடிவு செய்யாது என சி.டி.ரவி கருத்து.
வரும் மே 24-ஆம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவி காலம் நிறைவடையும் நிலையில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக மும்மரம் காட்டி வருகிறது. அதை போல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு தேர்தலாக கருதப்படுகிறது.
அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்த எடியூரப்பா
எடியூரப்பா 2 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும், அவரின் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியில் உளளார். இதற்கிடையில், எடியூரப்பா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு பதவி
இந்த நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் அரசியலில் விலகினாலும் கூட மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் பணியாற்றுவேன். என் மகன் விஜயேந்திரா சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவார். அவரை என்னை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
சி.டி.ரவி கருத்து
எடியூரப்பா மகன் விஜயேந்திரா, தற்போது பாஜக மாநில துணை தலைவராக உள்ளார். தனது மகன் குறித்த எடியூரப்பாவின் கருத்து குறித்து, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக உள்ள சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதை எப்போதும் குடும்பம் முடிவு செய்யாது. பாஜகவை பொறுத்தமட்டில் ஒரு வீட்டு சமையலறையில் இருந்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படுவது இல்லை. தலைவர்களின் பிள்ளைகள் என்பதாலேயே சீட் கிடைக்காது. சீட் கொடுப்பது குறித்து அவர்களின் வீட்டில் முடிவு செய்ய முடியாது.
விஜயேந்திராவுக்கு சீட் கொடுப்பதும் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி எப்படி பிரதமரானாரோ அதுபோன்ற வாய்ப்பு இங்கு நடக்காது என தெரிவித்துள்ளார்.
கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்
சி.டி.ரவி கருத்துக்கு எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஒரு பொதுக்கூட்டத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அரசியலில் உங்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் வளர்கிறீர்கள்.
சிடி ரவி மூத்த தலைவராக உள்ளார். பாஜகவுக்கு எடியூரப்பாவின் பங்களிப்பு என்ன? என்பது குறித்து சிடி ரவிக்கு தெரியும். தேர்தலில் சீட் வழங்குவது குறித்து முடிவு எடியூரப்பாவின் சமையலறையிலோ அல்லது யாருடைய சமையலறையிலோ முடிவு எடுக்கப்படவில்லை.
பாஜகவில் போட்டியிட சீட் எங்கு இறுதி செய்யப்படுகிறது என்பது அனைவருக்குமே தெரியும். எனது தேர்தல் அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா மகன் விஜயேந்திரா எச்சரிக்கை
எடியூரப்பா மகன் விஜயேந்திரா யுவ மோட்ச மாநாட்டை தொடங்கி வைத்து அந்த மாநாட்டில் பேசிய போது, அரசியல் ரீதியாக குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று எடியூரப்பா என்றுமே நினைத்தது இலை.
மகனை அமைச்சராக்க வேண்டும் என்று கனவு காணவில்லை. கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம். எடியூரப்பா மௌனம் காப்பதை அவரது பலவீனம் என்று நினைத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எடியூரப்பாவின் கருத்துக்கு சி.டி.ரவி காட்டமான கருத்து தெரிவித்த நிலையில், சி.டி.ரவிக்கு எடியூரப்பா மகன் விஜயேந்திரா பதிலடி கொடுத்துள்ளார். இதனால், கர்நாடகா பாஜக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…