கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை – பினராயி விஜயன்

கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 பேரில் 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 ஆக உள்ளது என்றும் இன்று மட்டும் 7 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட 502 பேரில் இதுவரை 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது கொரோனா வார்டில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. அதுபோல் கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மதுக்கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதியில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மதுபான கடைகள் திறப்பது, அதற்கு பாதுகாப்பிற்காக காவல் துறையினரை பணியில் அமர்த்துவதற்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களைப் போன்றே கேரளாவும் பொருளாதாரத்தில் கடும் சரிவு கண்டுள்ளது. ஆனாலும், அரசின் வருமானத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024