2020-ம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனிடையே தான் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவ் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், ‘இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை விரைவாக பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்தார். மேலும், ‘எல்லா பரிசோதனைகளையும் முடித்து, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த தடுப்பு மருந்தை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளார். 30 எம்.பிக்களும் உறுப்பினர்களாக உள்ளனர் .கொரோனாவால் இந்த நிலைக்குழுவின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.இதனிடையே நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.ல் 6 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ,2020-ம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான்கொரோனா தடுப்புமருந்தை எதிர்பார்க்க முடியும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…