#BREAKING: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மும்பையில் ஆர்.பி.ஐ. நிதிக்கொள்கை ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதில், நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் குறைய வாய்ப்பு. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய பொருளாதாரம் இறுதி கட்டத்தில் நுழைகிறது. ஜனவரி- மார்ச் மாத 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக மாறும்.
செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் படிப்படியாக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.