மேகதாது அணை விவகாரத்தில் மாற்றமில்லை- கர்நாடக முதல்வர்..!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.
தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் இடையே நிலவி வரும் மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகார முடிவில் எந்தவொரு மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்திக்கொள்ள உரிமையுள்ளது, சட்டப்படி கர்நாடக அரசு சரியாகவே உள்ளது என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.