கடன்களுக்கான (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாறுதல் இல்லை.
நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் இருந்தே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தொடரும்.
நாட்டில் பணவீக்கத்தை 4% க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. CPI பணவீக்கம் 2023-24 க்கு 5.4% ஆகவும், 2வது காலாண்டில் 6.4% ஆகவும், Q3 இல் 5.6% ஆகவும் மற்றும் Q4 இல் 5.2% ஆகவும் இருக்கும். எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான GDP வளர்ச்சி 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்றார். எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றமிருக்காது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் 2023-24 முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1% ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…