கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு!

Shaktikanta Das

கடன்களுக்கான (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாறுதல் இல்லை.

நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் இருந்தே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தொடரும்.

நாட்டில் பணவீக்கத்தை 4% க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. CPI பணவீக்கம் 2023-24 க்கு 5.4% ஆகவும், 2வது காலாண்டில் 6.4% ஆகவும், Q3 இல் 5.6% ஆகவும் மற்றும் Q4 இல் 5.2% ஆகவும் இருக்கும். எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான GDP வளர்ச்சி 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்றார். எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றமிருக்காது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் 2023-24 முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1% ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்