இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 3,23,144 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2771 உயிரிழப்புகள் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் 28,82,204 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட 71.68 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களை சார்ந்தவர்கள். இந்நிலையில், மத்திய அரசு இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
இதன் அடையாளமாக, எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை எந்த கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லடாக், திரிபுரா, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவை ஆகும்.
மகாராஷ்டிராவில் நேற்று 895 பேர் உயிரிழந்துள்ளனர். 66,358 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பஞ்சாபில் நேற்று 5,932 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர். 3,774 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இருவரை 3,51,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 பேர் உயிரிழந்துள்ளனர். 10,793 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்திலும் 14,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். 7,803 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று 24,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 381 பேர் உயிரிழந்துள்ளனர். 17,862 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி மே 1 முதல் 18 -வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தொற்றுநோயை வெல்ல அதிக அனுபவத்துடன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…