பட்டாசுகளுக்கு தடை இல்லை, பட்டாசு வெடிக்க தடை- உத்தவ் தாக்கரே..!
பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறிய நிலையில், பல்வேறு மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதித்து முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.