பப்ஜி கேம்க்கு ஏன் தடையில்லை? நெட்டிசன்கள் கேள்விகளுக்கு விளக்கம் இதோ!

Default Image

டிக் டாக், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றன.

சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில் முதல்கட்டமாக டிக்டாக் செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளார். இந்நிலையில் உலகளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்பொழுது வரை இந்த விளையாட்டை பலரும் விளையாண்டு வருகின்றனர்.

மேலும், மத்திய அரசு சீனா செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், அதில் பப்ஜி கேம் மட்டும் ஏன் தடை செய்யவில்லை? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன் காரணாமாக, ட்விட்டரில் #pubgban எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

ஆனால் இந்த பப்ஜி விளையாட்டானது, சீனாவில் உருவாக்கப்பட்டது இல்லை. அதனை அயர்லாந்தை சேர்ந்த ப்ரெண்டன் கிரீன்ஸ் என்பவர் உருவாக்கினார். ஏழினும், அந்த கேமின் அடுத்த அடுத்த வெர்சனை மேம்படுத்துவது, சீனாவை சேர்ந்த டென்சென்ட் கேமிங் நிறுவனம் தான். அதனால் இந்த பப்ஜி கேம், முழுக்க முழுக்கு சீனா செயலி இல்லை என தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்