ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலா.? டெல்லி தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Election Commission of India

மத்தியில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியானது இந்த வருடம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக தேர்தல் வேலைகள் தற்போது மும்மூரமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என ஒரு செய்தி பரவியது. இந்த தேர்தல் தேதி குறித்து தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது.

பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!

அதாவது, டெல்லி மக்களவைத் தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்காக ஒரு உத்தேசமாக ஏப்ரல் 16 எனும் தேதியை குறிப்பிட்டுள்ளதாகவும், அது உறுதியான தேர்தல் தேதி இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

முன்னதாக டெல்லி தேர்தல் தலைமை அதிகாரி, டெல்லியில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் ஏப்ரல் 16ஆம் தேதியை உத்தேசமாகக் கொண்டு தேர்தல் பணிகளை ஆரம்பிக்க கேட்டுக் கொண்டு உள்ளார். அதன்படி தான் ஏப்ரல் 16 தேர்தல் தேதி என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஆரம்பித்து மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்றது. அதேபோல், தற்போதும் நாடாளுமன்ற தேர்தலானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்திலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்