சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர்.
இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி (அதாவது இன்று ) வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தற்போதைக்கு சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிரான வழக்கில் சச்சின் பைலட் கோரிக்கையை ஏற்று மத்திய அரசையும் ஒரு மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் நகர்வுகளை பொறுத்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில்…
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…