300 மெகாவாட் சோலார் மின்சாரம் வழங்க ராஜஸ்தானுடன் என்எல்சி நிறுவனம் ஒப்பந்தம்!
சிபிஎஸ்யு திட்டத்தின் கீழ் 300 மெகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகம் (ஆர்யுவிஎன்எல்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு சூரிய சக்தியை வழங்குவதற்காக என்எல்சி இந்தியா மற்றும் உர்ஜா விகாஸ் நிகம் (RUVNL) இடையான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த என்எல்சி நிறுவனம் சுமார் 1,421 மெகாவாட் ஆற்றல் திறன் கொண்டது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டிற்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் 750 மில்லியன் யூனிட் (MU) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது, மேலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த பசுமை மின்சாரம் ராஜஸ்தானுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
நிலக்கரி அமைச்சம் தகவலின்படி, என்எல்சியின் 300 மெகாவாட் சோலார் திட்ட திறன் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சரில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) ஒப்பந்தம் போட்டி ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள