#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த புயல் கரையை கடக்கும் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்திய ராணுவ உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும், இதற்காக 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.