நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது உறவினர் வீடியோ வெளியிட்ட நிலையில் கைலாசாவின் சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Nithyananda

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாக அவர் வீடியோ பிரசங்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்று பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும், கைலாசாவில் வசித்துவரும் நித்தியானந்தா, உயிரிழந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கைலாசா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, கைலாசாவின் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட என்ட்ரி கொடுத்துள்ளார் நித்தியானந்தா. அந்த வீடியோவில் நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்று தலைப்பிட்டு, “குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். இந்து எதிரிகள், வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். இப்படியே பண்ணா என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன் பாத்துக்கோங்க”என்று பேசியுள்ளார்.


மற்றொரு வீடியோவில், நான் உயிரோடுதான் இருக்கேனா, இல்லையா? ஒரு முடிவுக்கு வாங்கப்பா, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க. நான் இறந்துவிட்டதாக சிலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். 3 மாதங்களில் 4,000 வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை நான் எப்போது பார்த்து முடிப்பது? இப்போது எனக்கே சந்தேகமா தான் இருக்கு உயிரோடு இருக்கேனா இல்லையா என்று… எதாவது ஒரு முடிவுக்கு வாங்க”  என்று குறிப்பிட்டுள்ளார்.

நேரலையில் நித்யானந்தா

நித்யானந்தா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், ஏப்ரல் 2-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என்று அறிவிக்கப்படுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்