நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு ! பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவி ?

Default Image

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் ,பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான்  (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.

பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இதனால் நேற்று நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.ஆகவே  இன்று நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்கிறார்.இந்த விழா பீகார் தலைநகர் பட்னாவில் நடைபெறுகிறது.நிதிஷ்குமாருக்கு ஆளுநர் சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை அதிகபட்சமாக அமைச்சரவையில் 36 பேர் இடம்பெற முடியும்.இதில் பாஜகவிற்கு 18 அமைச்சர் பதவிகளும் ,ஐக்கிய ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் பாஜகவிற்கு இரண்டு  துணை முதலமைச்சர் பதவிகளும் வழங்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்