#BREAKING: பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் ,பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.
பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் நிதிஷ்.இதனால் நேற்று நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.ஆகவே இன்று நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் .நிதிஷ்குமாருக்கு ஆளுநர் சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பீகாரில் 7வது முறையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் முதல்வரானார் நிதிஷ்குமார்.