#Breaking : 8வது முறையாக மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்.!
பாஜக கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து 8வது முறையாக மீண்டும் முதல்வராகி உள்ளார் நிதிஷ் குமார்.
கடைசியாக நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார் . ஐக்கிய ஜனதா தளத்தை (43) விட பாஜக அதிக இடம் (74) வென்றுள்ளது என்றாலும், முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்தார்.
ஆனால், பாஜகவை சேர்ந்தவர்களுக்கே, நிதித்துறை, சுகாதாரத்துறை போன்ற முக்கிய துறைகள் பாஜக வசம் இருந்தது.
அதன் பின்னர், சில அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஐக்கிய ஜனதா தளம். இதனால், நேற்று தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.
பிகாரில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ் குமார்.
75 எனும் அதிக எண்ணிக்கை எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தாலும், பாஜக ஆட்சியில் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல்வர் பதவியை மூன்றாவது அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களை கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமாருக்கு விட்டுக்கொடுத்து உள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் காட்சிகள் கூட்டணி அமைத்து, பாட்டனா, ராஜ்பவனில் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார்.
அதே போல ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்கள் இருவருக்கும், பீகார் ஆளுநர் பகு சவுஹான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.