மீண்டும் மோடி.! பாஜக ஆட்சியமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு.!

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் இந்திய அரசியலில் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பாஜகவுக்கு இந்த முறை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் அரசியல் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், சந்திரபாபு நாயுடு(தெலுங்கு தேசம்), நிதிஷ்குமார் (JDU) உள்ளிட்ட பிரதான கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைமையில் NDA கூட்டணி ஆட்சியமைக்க நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்கள் ஆதரவு கடிதங்களை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சி எம்பிக்கள் என 10 எம்பிக்கள் NDA கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து, பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025