கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணைகட்டப்படும் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணைகட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அதேபோல் கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணைகட்டப்படும்.ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இந்தியாவின் உபரிநீரை திசை திருப்ப ஷாஷ்பூர்-காண்டி பகுதியில் ராவி நதியில் அணை கட்டும் பணி நடக்கிறது .ராவிநதி உபரிநீரை திசைதிருப்பி ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.