டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்.. 7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கின்றனர். கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது, மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இந்த குழுவில் உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அமலில் இருந்த திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பை அமைத்தது மத்திய அரசு.