டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெல்லியில் ஜூலை 27-ஆம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செலகிறார். டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்ல கட்டடத்திற்கு 26ம் தேதி அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின், 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இந்நிலையில், வரும் 26ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…