இன்று தொடங்கிய எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி, தலைமை தாங்கினார்.
நாட்டின் எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தலைமையில் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிரமலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பல முதல்வர்கள், முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சிலில் அனைத்து முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் இதில் அடங்குவர், மற்றும் இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். ஆனால், முதல்வர்களான நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சந்திரசேகர் ராவ், அசோக் கெலாட், பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன்(Theme): “விக்சித் பாரத் @2047: இந்திய அணியின் பங்கு” கருப்பொருளுடன் இன்றைய நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.
(i)விக்சித் பாரத்@2047, (ii)MSMEகள்(சிறுகுறு தொழில்கள்), (iii)உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv)குறைகளை தீர்த்தல், (v)பெண்களுக்கான அதிகாரம், (vi)சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (vii)திறன் மேம்பாடு, மற்றும் (viii) பகுதி மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கான கதி சக்தி உள்ளிட்ட எட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து இன்று நாள் முழுவதும் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…