நித்தியின் ‘கைலாச தீவு’ எங்கள் நாட்டில் இல்லை! ஈக்வெடார் நாட்டு அரசு தடாலடி!
- நித்யானந்தாவின் கைலாச தீவு ஈக்வெடார் நாட்டில் இல்லை – அந்நாட்டு அரசு அறிவிப்பு
- நிதியானந்தாவிற்கு நாங்கள் உதவவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரிவியவில்லை.
- குஜராத் அரசு அவரை கண்டறிய ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.
தற்போதைய நிகழ்கால நிகழ்வுகளில் பரபரப்பாக பேசப்படுவதில் முக்கியமானது நித்தியானந்தாவின் கைலாச தீவுதான். தனி கொடி, தனி அரசு, தனி பாஸ்போர்ட் என கைலாச தீவின் பேச்சுக்கள் அதிகமாகி கொண்டே போகிறது.
இந்த கைலாச தீவு, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வெடார் நாட்டிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்று. அதனை நித்தியானந்தா வாங்கிவிட்டார் என கூறப்பட்டது. மேலும் அதற்கு தனி நாடு அந்தஸ்து கேட்டு ஐநாவில் முயற்சி செய்து வருகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், இந்த செய்திகளை ஈக்வெடார் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. நித்யானந்தா தங்கள் நாட்டிடம் தஞ்சம் புக அனுமதி கேட்டார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம், அவருக்கு நாங்கள் உதவி செய்யவில்லை. எங்கள் நாட்டிற்கு சொந்தமான எந்த தீவையும் அவர் வாங்கவில்லை. எனவும், அவர் அருகில் உள்ள ஹைதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளத. எங்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியாது எனவும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனால், தற்போது நித்தியானந்தா எங்கிருக்கார் என இன்னும் தகவல் தெரியவில்லை. இதற்கிடையில் குஜராத் அரசு அவரை கண்டறியா ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட திட்டமிட்டு வருகிறதாம். இதன் மூலம் நித்தியானந்தாவை பிடிக்க சர்வதேச இன்டர்போல் உதவிய நாட குஜராத் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.