நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து பல நிபந்தனைகளுக்கு அடுத்து நித்தியானந்தாவிற்கு ஜாமீன் அந்த வருடம் ஜூன் மாதம் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
நித்தியானந்தா மீது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனுதாக்கல் செய்தார்.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீது ராம் நகர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது.நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள நிலையில்,பல விசாரணையில் அவர் ஆஜராகவில்லை.நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்ப்பட்டுள்ளார்.எனவே நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்டி .குன்கா அமர்வில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த அமர்வு,இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்தில் நித்தியானந்தா மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் நித்யானந்தாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு நேற்று (பிப்ரவரி 5 -ஆம் தேதி ) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி ஜான் மைக்கேல்டி .குன்கா உத்தரவு பிறப்பித்தார் .
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…