ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வணிக வியாபாரிகள் 3 கோடி பேருக்கு பென்ஷன் திட்டம்-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2019-2020க்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வணிக வியாபாரிகள் 3 கோடி பேருக்கு பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும்.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.