நாம் ஏற்கனவே தெரிவித்தது போல இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்தாலோசித்தார். அப்போது அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக இன்று இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள், 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியானது 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த வரி கணக்கீடு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊக்கத்தொகை ஏதுமின்றி செயல்படும் நிறுவனங்களுக்கு 22 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 17.01 சதவீதமாக உள்ளது.
அதேபோல் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் கார்ப்பரேட் வரியாக 15% மட்டுமே செலுத்தும் வாய்ப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
சலுகைகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வாரியாக கருதப்படும் மேட் வரியானது, 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…