நிதியமைச்சரின் கவனம் பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்- முழு விவரமும் உள்ளே

Published by
kavitha

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இதிலிருந்து ரூ. 2000 தற்போது உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர்.கொலைக்கார வைரஸால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும்  இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு  உள்ளார்.

நிதியமைச்சரின் அறிவிப்புகள்

  • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலமாக சுமார்  5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
  • ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 முதற்கட்டமாக இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.இதனால் சுமார் 3 கோடி பேர்  பயன்பெறுவார்கள்.
  • ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வரவு வைக்கப்படும்.  இதன் மூலமாக சுமார் 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாத காலத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
  • மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் சுமார் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது  அது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தமாக 24% தொகையையும் அரசே செலுத்தும்.இதில் 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.
  • அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை அவர்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
  • கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசே வழங்கலாம்.
  • இந்தியாவில் யாரும் பசியுடன் இருக்க கூடாது.அதன்படி  நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என சுகாதாரத்துறையில் உள்ள அனைவத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

4 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

5 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago