இந்தியாவில் யாரும் பசியில் இருக்ககூடாது…3 மாதக்காலத் தேவைக்கு இவைகள் இலவசம்-அறிவித்தார் நிதியமைச்சர்

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதில் யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று தெரிவித்த அவர் மக்களின் அத்தியவசிய தேவைகளை அரசு அறியும் .அதன்படி 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை ஆகியவைகள் 3 மாத்திற்கு கூடுதலாக வழங்கப்படும்.அதனோடு ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.