Breaking:3 மாதத்திற்கான வைப்பு நிதியே அரசே செலுத்தும்-நிதியமைச்சர் அறிவிப்பு

Default Image

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அடுத்த 3 மாதங்களுக்கான வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் என்று தெரிவித்து 3 முக்கிய அம்சங்களை தெரிவித்துள்ளார்.அதில்  மாத வருமானம் ரூ. 15,000 கீழ் உள்ளவர்களுக்கு அரசே பி.எப் தொகையை செலுத்தும் , பி.எப்.பில் இருந்து 75 %தொகையை எடுத்துக்கொள்ளலாம், 100-க்கும் குறைவான பணியாளர்களை கொண்ட நிறுவனத்திற்கே இது பொருந்தும்  என்று தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்