நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் உரையை சுமார் இரண்டரை மணி நேரம் வரை உரையாற்றிய நிர்மலா சீதாராமனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் அவரால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது முறையாக நாட்டின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
கடந்த முறை 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார்.இந்த முறை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்தார்.இந்நிலையில் கடைசி இரண்டு பக்கங்கள் இருக்கும் போது அவரால் உரையாற்ற முடியாமல் உடல் நலம் லேசாக பாதிக்கப்பட்டது. இதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடைசி இரண்டு பக்கங்களையும் தான் படித்ததாக கூறும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…