மத்திய நிதியமைச்சர் தலைமையில் அல்வா கிண்டும் நிகழ்வு.!

Default Image

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு அல்வா தயாரிக்கும் பணியினை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆரம்பித்தார். 

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெற உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு முன்பாக மத்திய அரசின் சார்பில் இனிப்பு தயாரித்து அதாவது அல்வா தயாரித்து கொடுப்பது வழக்கம்.

கொரோனா முன்னெச்சரிக்கை : அதே போல, இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வானது மத்திய நிதியமைச்சகத்தின் நார்த் பிளாக் பகுதியில் இருக்கும் பட்ஜெட் பிரின்டிங் பிரஸ்ஸில் வைத்து நடைபெறுவது வழக்கம். 2021 வரை தொடர்ந்த இந்த நிகழ்வு கடந்த ஆண்டு கொரோனா பரவல் முன்னெச்செரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அல்வா தயாரிப்பு : இந்தாண்டு நேற்று குடியரசு தின நாளில் அல்வா தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த அல்வா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன்ராவ், நேரடி வரி துறை மற்றும் CBIC பிரிவு தலைவர்கள் மற்றும் இதர நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் பிரிண்ட் : இந்த அல்வா தயாரிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு ‘லாக் இன்’ செய்து படஜெட் பிரின்டிங் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த பட்ஜெட் பிரின்டிங் பணியில் ஈடுபடும்  ஊழியர்கள் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகுதான் மத்திய அமைச்சகத்தில் இருந்து வெளியே வருவார்கள். அதுவரையில் அங்கேயே தான் தங்கி விடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்