பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். அதில் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, நர்சிங் கல்லூரிகள், இணையவழி நூலகம் , என பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பட்ஜெட் குறித்தும், அதற்கு முன்னெடுத்த ஆலோசனைகள் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து கொடுத்த அறிவுறுத்தல் குறித்து பேசினார்.
அப்போது இந்த பட்ஜெட்டால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் கலந்தாலோசித்தேன். அதற்கு அவர் கூறுகையில், சாமானிய மக்கள் பாதிக்கப்படும் வகையில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என திட்டவட்டமாக கூறினார் என்று குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…