“சுயசார்பு பாரதம் “என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

Default Image

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். 

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டு வருகிறார்.5 அம்ச நோக்கங்களுடன் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.நாட்டின் பல்வேறு துறையோடு ஆலோசனை நடத்திய பிறகு இந்த நிதி தொகுப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்