கடந்த 100 ஆண்டுகளில் யாரும் பார்த்திராத பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

Default Image

கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை தனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அதன்மூலம் முன்பு இல்லாத பட்ஜெட்டை தயாரிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழில்துறையினர் யோசனைகள் இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களது விருப்பம் இல்லாமல் பட்ஜெட்டை என்னால் தயாரிக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும், பெரும்தொற்றல் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். நமது நாட்டு மக்கள்தொகை, பொருளாதாரத்தை கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, சர்வதேச பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்