இந்திய நிதித்துறைக்கு பிரகாசமான எதிர்காலம்… பொருளாதார ஆய்வறிக்கை தகவல்.!
டெல்லி: 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனையொட்டி இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இன்று பிற்பகல், மாநிலங்கல்வையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் பிறகு நிதிநிலை அறிக்கை விவரங்கள் முழுதாக வெளியாகும்.
தற்போது PTI செய்திக்குறிப்பில் வெளியான தகவலின்படி, நிதிநிலையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்களாக, இந்தியாவின் நிதிநிலை கொள்கை சவால்களை சமாளித்து, உலகளாவிய நிச்சயமற்ற நிதிநிலைகளுக்கு மத்தியிலும் நிலையான தன்மையை உறுதிசெய்தது.
உலகலாவிய அரசியல் மோதல்கள் அதிகரித்து உள்ளதன் காரணமாக அதன் தாக்கம் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கொள்கை நிலைப்பாட்டை பாதிக்ககூடும். நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார செயல்திறன் இருந்தபோதிலும், 2024 நிதியாண்டில் உள்நாட்டு வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது.
இந்தியாவின் நிதித் துறைக்கான கண்ணோட்டம் வரும்காலத்தில் பிரகாசமாகத் தெரிகிறது. வரும் 2025 நிதியாண்டில் பொருளாதாரம் 6.5 முதல் 7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.