ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

Finance Minister Nirmala Siitharaman

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.!

இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 55 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் , கடந்த 2004 முதல் 2014 வரையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையையும், தற்போதுள்ள இந்திய பொருளாதர நிலைமையும் குறிப்பிட்டு பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

2014இல் வெள்ளை அறிக்கை :

இந்த அறிக்கையை பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டிலேயே நாங்கள் வெளியிட இருந்தோம். ஆனால் அப்போது வெளியிட்டால், அது இந்திய பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். அப்போது உள்ள நாட்டின் பொருளாதாரத்தை கண்டு முதலீட்டாளர்கள் இங்கிருந்து சென்று விடும் நிலைமை உருவாகி இருக்கும். அதனை கருத்தில் கொண்டே இந்த வெள்ளை அறிக்கை இப்போது வெளியிடப்படுகிறது.

ஊழல் :

2004 – 2014 மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதார சூழல் மிகவும் மோசமான சூழலில் இருந்தது. வாராக்கடன் அளவு மிக அதிகமாக இருந்தது. அரசின் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. ஊழல் அதிகமாக இருந்து. குறிப்பாக தொழில்தொடர்ப்பு துறையில் 2ஜி ஊழல் நடைபெற்றது. நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் போட்டில்யில் ஊழல் என பல்வேறு ஊழல் அரங்கேறியது. பணவீக்கம் காரணமாக வங்கிகள் மிக மோசமான நிலைமையில் இருந்தன.

பற்றாக்குறை :

மின்சார தட்டுப்பாடு அதிகமாக நிலவியது. தங்க இறக்குமதி ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. கொள்கை ரீதியில் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு பல்வேறு தடைகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தன. அதனை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தகர்த்து பல்வேறு தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய நிலை :

தற்போது இந்தியாவில் , 620 பில்லியன் அளவில் அந்நிய செலவாணி இருக்கிறது. தற்போது வலுவான நிலையில் இந்திய பொருளாதரம் உள்ளது.   தற்போது உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் இந்திய பொருளாதரம் ஆகும். பொருளாதார ரீதியில் இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது. அடுத்து வேகமாக 3வது இடம் நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்கால திட்டங்களை நோக்கி தன்னம்பிக்கையுடன் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

கருப்பு அறிக்கை :

அதற்கு முன்னதாக, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், பாஜக வாக்குறுதி அளித்தது போல ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு எங்கே ஏற்படுத்தப்பட்டு உள்ளது, பணவீக்கம் அதிகமாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுக்களை மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்