புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
2025 வருமான வரி சட்ட மசோதாவை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் மொத்தம் 23 அத்தியாயங்களும், 16 அட்டவணைகளும் இடம் பெற்றுள்ளன. வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், குறைந்த வருமானம் உடையோருக்கு அதிக சலுகைகள் வழங்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிநபர் வரி முறை மாற்றங்கள் என்ன?
புதிய மசோதா மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரிச்சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, வீட்டுக் கடன் வட்டி செலவுகள், மருத்துவ செலவுகள், கல்வி கடன் போன்றவற்றில் கூடுதல் கழிவுகள் வழங்கப்பட உள்ளன. வயதான குடிமக்களுக்கு வரிச்சலுகைகளை அதிகரிக்கும் விதமாக புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
விவசாய வருமான வரி முறையில் மாற்றம்
அதைப்போல, விவசாய வருமான வரி தொடர்பாக புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிறு விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில், அதிக வருமானம் ஈட்டும் விவசாய நிறுவனங்களுக்கு புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் விவாதத்திற்கு வரும். மக்களவையில் முடிவான பிறகு, மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெறும். அதன் பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றவுடன், புதிய வரி மசோதா சட்டமாக அமலும், நடைமுறையில் வரும்.
இந்த புதிய வரி மசோதா அமலுக்கு வந்தால், மக்களுக்கு வரிச்சுமை குறைவதற்கும், தொழில் வளர்ச்சிக்கும், முதலீடுகளுக்கும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கும் என்பது தொடர்பாக எதிர்காலத்தில் கூடுதல் விளக்கங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.