எம்.பி நிதியில் இருந்து 1 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்.!
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 909 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இதையெடுத்து அவர்களுக்கு உதவுவதற்காக கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததை தொடந்து நடிகர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடியும் ,டாடா குழுமம் சார்பில் ரூ.1,500 கோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.