இந்தியாவில் புதிய டிஜிட்டல் கரன்சி -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.
இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கும். அந்த விதிமுறைகளை விரைவில் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025