மின்சார நிறுவனங்களுக்கு நிதியுதவி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். இதில் மின்சாரத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரத்தில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது என கூறிய அவர், மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.