பட்ஜெட் 2024 : புதிய வருமான வரி விகிதங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்..!
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பாக புதிய வருமான வரி விகிதங்களை அறிவித்தார்.
அதில் முக்கிய அறிவிப்பாக, அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும் எனவும் தாமதமாக வருமான வரி செய்வது இனிமேல் கிரிமினல் குற்றமாக கருதப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் உள்ள நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இணையவர்த்தகத்திற்கான TDS வரியை 11% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 12.5 % சதவீத மாத ஊதியம் பெறுவோருக்கான ஸ்டாண்டர்ட் டிடக்சன் (Standard Dedcution) ரூ.50,000-லிருந்து ரூ.75,000-மாக உயர்வு. மேலும், வருமான வரியில் புதிதாக சில விகிதங்களையும் அறிவித்துள்ளனர்.
புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள வருமான வரி விகிதங்கள் :
- ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி விதிப்பு இல்லை.
- ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 % சதவீதம் வரி விதிக்கப்படும்.
- ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% சதவீதம் வரி விதிக்கப்படும்.
- ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 15% சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
- ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுதோறும் வருவாய் ஈட்டுவோருக்கு 20% சதவீதம் வரி விதிக்கப்படும்.
- ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30% சதவீதம் வரி விதிக்கப்படும்.
- பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.