“அணைத்ததை தவிர்ந்துருக்கலாம்”நிர்மலா சித்தாராமன் அட்வைஸ்…!!
பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான்கான் பதவி ஏற்கும் விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.
விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுபற்றி பின்னர் பேசிய சித்து, இந்தியாவின் பஞ்சாப் நகரில் உள்ள சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்டார்பூர் வழியை திறந்து விடுவதற்கான பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது என பாஜ்வா என்னிடம் கூறினார். அதனாலேயே அவரை நான் கட்டி பிடித்தேன் என கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. சித்து சார்ந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங் இதனை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், இந்திய மகளிர் பத்திரிகையாளர் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், சித்துவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதுபோன்ற மதிப்பிற்குரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று பின் அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி அணைப்பது என்பது நமது வீரர்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தும். அது மக்களிடம் நம்பிக்கையை இழக்க செய்யும். இதனை சித்து தவிர்த்து இருக்கலாம் என கூறி உள்ளார்.
DINASUVADU