விவசாயிகள் பிரச்சனையில் உண்மையாக செயல்படுகிறோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு உண்மையாக செயல்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசு 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!
சிறு குறு விவசாயிகள் தொடங்கி அனைத்து விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க பிரதமர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது யூரியாவின் விலை ரூ.300லிருந்து ரூ.3000ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் ரூ.300-க்குதான் விவசாயிகள் யூரியாவை பெறுகின்றனர். காரணம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தான். விவசாயிகள் பிரச்சனைகளில் நாங்கள் உண்மையாக செயல்பட்டு வருகிறோம்” என கூறினார்.
#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman says, ” Centre has formed a 3-member committee of Ministers and is negotiating with farmers…PM Modi has taken every step to increase the income of farmers and he works for even the smallest farmers. The expense of Urea has… pic.twitter.com/mBEd6uXa5o
— ANI (@ANI) February 23, 2024