#BREAKING: நிர்பயா வழக்கில் குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

Published by
Venu

டெல்லியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா  தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பிய நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் . இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில்,முகேஷ் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதனைத்தொடர்ந்து  குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா  தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்துள்ளார்.

ஏற்கனவே நிர்பயா குற்றவாளிகளை இன்று (பிப்ரவரி 1-ஆம் தேதி) தூக்கிலிடத் தடைக்கோரி  டெல்லி  நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்  ஏ.பி.சிங் (AP Singh)  தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ,தூக்கு தண்டனையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

7 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

10 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

12 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

13 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

14 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

14 hours ago