டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் , ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேரும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை மூன்று முறை தள்ளிப்போனது.இந்நிலையில் நாளை தூக்கி உறுதி செயப்பட்டுள்ளது.
குற்றவாளி முகேஷ் தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நேற்று முன்தினம் காலை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி கொடுக்கப்பட்ட மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நேற்று காலை மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் பாலியல் சம்பவம் நடக்கும் போது நான் அந்த இடத்தில் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…